மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரத்தில் போலீசார் விசாரணையில் மரணமடைந்த கோயில் காவலாளி அஜித்குமார் வீட்டுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், பிரேமலதா அளித்த பேட்டியில், ‘‘அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதாவுக்கு ஆதரவளிக்கும் போலீஸ் அதிகாரிகள் யார் என்ற விவரம் நீதிபதிகள் விசாரணையில் வெளிவரவேண்டும்.
நீதிபதிகள் விசாரணை நடத்தி அஜித்குமார் குடும்பத்தினருக்கு நீதி வழங்க வேண்டும். நிகிதா பின்னணி என்ன? அவருக்கு ஆதரவளிக்கும் அதிகாரிகள் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்’’ என்றார். முன்னதாக சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தேமுதிக சார்பில் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிகிதா பின்னணி என்ன? ஆதரவு அதிகாரிகள் யார்? பிரேமலதா கேள்வி
0