அபுஜா: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 20 மருத்துவ மாணவர்கள் மர்ம கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் மைடுகுரி மற்றும் ஜோஸ் நகரங்களை சேர்ந்த மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேர் பினியூ நகரில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர். அப்போது அங்கு வாகனங்களில் மறைந்திருந்த கும்பல்கள் மாணவர்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. கடத்தப்பட்ட மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.