அபுஜா: நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள சந்தை நகரமான மோக்வாவில் தொடர்ந்து பல மணி நேரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மூழ்கின. வெள்ளநீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பலர் ஆபத்தில் சிக்கியுள்ளனர். மொத்தம் 88 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நிலவி வருகின்றது.
நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி 88 பேர் பலி
0