நெய்வேலி: நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி அன்பழகன் என்ற தொழிலாளி உயிரிழந்தார். நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1விரிவாக்கம், சுரங்கம் 2 என 3 திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சுரங்கம் 2ல் நெய்வேலி அருகே புது இளவரசன்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பழகன் (48) சொசைட்டி தொழிலாளி இவர் வழக்கம் போல் பணிக்கு சென்றார்.
அப்போது அவர் கன்வேயர் பெல்ட் பகுதியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது திடீரென்று கன்வேயர் பெல்ட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே அன்பழகன் உயிரிழந்தார். இதனை கண்ட சக தொழிலாளிகள் அவரது உடலை மீட்டு என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதி தொழிலாளிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.