Thursday, April 25, 2024
Home » அடுத்த பிரதமர்… மோடியா எடப்பாடியா? யோசித்து ஓட்டு போடணுமாம்…அதிமுக காமெடி போஸ்டர்

அடுத்த பிரதமர்… மோடியா எடப்பாடியா? யோசித்து ஓட்டு போடணுமாம்…அதிமுக காமெடி போஸ்டர்

by Ranjith

அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் நேற்று நள்ளிரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் மணிமாறன், பாராளுமன்ற கட்டிடத்தின் பின்னணியில் இந்தியா வரைபடத்தில் எடப்பாடி பழனிசாமி வணங்கிய படி நிற்க, அடுத்த பிரதமர் மோடியா; எடப்பாடியாரா என சிந்தித்து அம்மாவின் ஆசி பெற்ற இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களியுங்கள் என போஸ்டர் ஒட்டியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்ததில் இருந்து, இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியை அடுத்த பிரதமர் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் திருப்புவனம், சிவகங்கை, திருப்புத்தூர், தேவகோட்டை, காரைக்குடி, சேலம் மற்றும் சென்னையில் ஒட்டப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

four + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi