புதுடெல்லி: ஜூன் மாதம் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், நெக்ஸ்ட் தேர்வுகள் 12 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. முதுகலை மருத்துவம் மற்றும் இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கு விரும்பும் வெளிநாட்டில் படித்த மருத்துவ மாணவர்களுக்கான தேர்வாகவும் இது இருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நெக்ஸ்ட் தேர்வு அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் நெக்ஸ்ட் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். இதன்படி 2020ம் ஆண்டின் எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு 2025ம் ஆண்டு நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.