சென்னை:நெட் தேர்வு முடிந்த நிலையில், அதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்தன. அதை விசாரித்த ஒன்றிய கல்வி அமைச்சகம் நெட் தகுதித்தேர்வை ரத்து செய்தது. அவ்வாறு ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கு பதிலாக மறுதேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. வருகிற 21ம் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4ம் தேதி வரை கணினி வாயிலாக 83 பாடங்களுக்கு நடத்தப்பட உள்ளதாக மறுதேர்வு குறித்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வு குறித்த விவரங்களை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். தேர்வு மையம், ஹால்டிக்கெட் வெளியீடு போன்ற கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ எனும் வலைத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவி மைய எண் மூலமாகவோ அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகவோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.