வெலிங்டன்: நியூசிலாந்தின் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாக பதிவானது. கிரைஸ்ட்சர்ச் மேற்கே 124கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய தெற்கு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பலர் வீடுகளை விட்டு வெளியே சாலைகளில் திரண்டனர். நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சுமார் 14000க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தை உணர்ந்தாக ஜியோநெட் கண்காணிப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.