டொரண்டோ: கனடா பிரதமர் மார்க் கார்னி கூறுகையில், ‘‘வருகிற 30நாட்களுக்குள் கனடாவும், அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டன. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்போது அதனை மதிப்பாய்வு செய்து எங்களது பதிலை தெரிவிப்போம்.
நியாயமற்ற அமெரிக்க வரிகளில் இருந்து கனடா தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை பாதுகாக்க வேண்டும். அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்துக்கு ஏற்ப ஜூலை 21ம் தேதி அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் இறக்குமதிகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும்” என்றார்.