சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையின் முன்னாள் இணை இயக்குநரும் எனது உறவினருமான எல். மணிமாறன் அவர்களது திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து நேரத்தில் அவரது அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றிய சக செய்தி மக்கள் தொடர்புத்துறை பணியாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.