சென்னை: செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தமிழக அரசு புதிய வாட்ஸ்அப் சேனல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்பு பிரசாரங்கள் மற்றும் போலி செய்திகளை கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களை தரவுகளோடு பதிவிட்டு வருகிறது. எனவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்து பின்தொடரவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளின் உண்மைத்தன்மை அறிய தமிழக அரசு தொடங்கிய புதிய வாட்ஸ்அப் சேனல்
previous post