தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைக்க குழு: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி
2023-03-19@ 00:57:09

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் கார்த்திகேயன், மாநில உயர்கல்வி மன்ற துணை தலைவர் ராமசாமி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பல்கலைக்கழக தேர்வுகளில் வினாத்தாள் தயாரித்தல் மற்றும் விடைத்தாள் திருத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை களைதல் குறித்தும், பதிவாளர், இயக்குனர் போன்ற முக்கிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது குறித்தும், சட்டப்பேரவையில் வெளியிடப்பட இருக்கூடிய புதிய அறிவிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
இதன் பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகம் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு மாதிரியான நடைமுறைகள் உள்ளன. அவற்றை மாற்றி அனைத்து பல்கலைகழகங்களிலும் ஒரே நடைமுறை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதன் முதல்படியாக, பணி நியமனங்கள், தேர்வுக்கட்டணம், பதிவாளர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் என ஒரே மாதிரி நிர்வாகம் உருவாக்கப்படும். அதன் அடிப்படையில் விரைவில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு அளிக்கும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பழைய தேர்வு கட்டணமே மாணவர்களிடம் வசூலிக்கப்படும். போலி டாக்டர் பட்டம் சர்ச்சை, இனி எந்த பல்கலைக்கழகத்திலும் நடைபெறாது என உறுதியளிக்கிறேன். வரும் காலங்களில் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளை நடத்தினாலும், அதுதொடர்பான அனுமதியை உயர்கல்வி துறையின் செயலாளரிடம் பெற்ற பின்னரே நடத்த வேண்டும். அதேபோல, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி துணை வேந்தர்களை, மாநில அரசே நியமிக்கும் மசோதா மட்டுமல்லாது, ஆன்லைன் சூதாட்ட மசோதாவையே திருப்பி அனுப்பி உள்ளார்.
மேலும் செய்திகள்
வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய 3 பணிமனைகளை மேம்படுத்த ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கீடு: 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா மஹால் புனரமைப்பு பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் உள்ள 74 ரயில் நிலையங்களில் 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம்: ரயில்ேவ கோட்டம் தகவல்
3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நீர்நிலைகள், குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடியில் புதுப்பிக்கப்படும்
14500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் 2030க்குள் செயல்படுத்தப்படும்: ரூ.77,000 கோடி நிதி ஒதுக்கீடு
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!