SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரூப் 1, 4 மற்றும் 2, 2ஏ உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி 14 தேர்வுகளின் முடிவு எப்போது வெளியாகும்?

2023-03-19@ 00:56:02

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,446 காலிப் பணியிடங்களுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி முதன்மை தேர்வு நடந்தது. அதற்கான தேர்வு முடிவு வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். குரூப் 4 பதவிகளில் வரும் 7,301 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு மாத இறுதிக்குள் வெளியாகும். குரூப்-1 பதவிகளில் இருக்கும் 95 காலி இடங்களுக்கு 2022ம் ஆண்டு நடந்த  முதல்நிலைத் தேர்வு  முடிவு ஏப்ரலில் வெளியாகும். 731 கால்நடை உதவி மருத்துவர் தேர்வுக்கான முடிவு மே மாதம் வெளியிடப்படும்.  ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவை துறையில் வரும் 217 பணியிடங்கள், மீன்வளத்துறையில் 64 இன்ஸ்பெக்டர்கள், 24 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்.

தமிழ்நாடு சுகாதார சேவைத்துறையின் கீழ் வரும் 12 சுகாதார அதிகாரி பணியிடம், 8 ஜெயிலர் பணியிடங்கள், 10 வனப்பயிற்சியாளர்களுக்கு  தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும். சில பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மே மாதத்திலும் வெளியிடப்படும். தேர்வு முடிவு அட்டவணையை போலவே, காலிப் பணியிடங்கள் குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்தாண்டுக்கான ஓர் ஆண்டு அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி புதுப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி உதவி ஜெயிலர் பணியிடத்தில் காலியாக உள்ள 59 பணியிடத்துக்கு அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும்.

23 உதவி சுற்றுலா அதிகாரி(கிரேடு-2) காலி இடத்துக்கு அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும். தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகத்தில் 14 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். 194 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு அக்டோபர் மாதத்தில் நடைபெறும்.

384 ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணி இடங்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடக்கும். எவ்வளவு காலி பணியிடம் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும். இதே போல மொத்தம் 29 வகையான பணியிடங்கள் குறித்த விவரத்தை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்