SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் ஆணையர்கள் நியமனம் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு சட்ட அமைச்சகம் எதிர்ப்பு

2023-03-19@ 00:30:46

புதுடெல்லி: தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றத்திற்கு சட்ட அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்து உ்ளளது. இந்திய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,’ தலைமைத் தேர்தல் ஆணையர்  மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்க பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தது. இதுபற்றி ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:

அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டபடி தலைமை தேர்தல் ஆணையர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகிறார்கள். நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் சொல்வது என்னவென்றால், ஒவ்வொரு முக்கியமான நியமனத்திலும் இந்தியாவின் தலைமை நீதிபதி அல்லது நீதிபதிகள் தலையிட்டால், நீதித்துறையின் பணிகளை யார் முன்னெடுப்பார்கள்? நாட்டில் பல நிர்வாக விஷயங்கள் உள்ளன. எனவே நீதிபதிகள் நீதித்துறை பணிகளை பார்க்க வேண்டும்.  நீதிபதிகள் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டால் விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும் .எனவே நீதிபதிகள்   நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு   கூறினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்