அண்ணாமலையார் கோயில் இடத்தில் பாஜ மாநில நிர்வாகி ஆக்கிரமித்து கட்டிய அடுக்குமாடி கட்டிடம் இடிப்பு: ரூ.30 கோடி மதிப்பு நிலம் மீட்பு
2023-03-19@ 00:26:09

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, பாஜ மாநில நிர்வாகி கட்டியிருந்த அடுக்குமாடி கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றி, ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான இடம் அம்மணி அம்மன் மடம் எனும் பெயரில் அமைந்துள்ளது. இங்கு பாஜவின் ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் , 23,800 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து 2 அடுக்கு மாடி கட்டிடம் கட்டி குடியிருப்பதாகவும், அலுவலகம் நடத்தி வருவதாகவும் புகார் வந்தது.
இதை அகற்ற, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2015 முதல் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதை எதிர்த்து பாஜ நிர்வாகி சங்கர், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கோயில் இணை ஆணையர் வே.குமரேசன் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரத்துக்கு எதிரில் அம்மணி அம்மன் மடத்தில், பாஜ நிர்வாகி கட்டியிருந்த 2 அடுக்கு மாடி கட்டிடம் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது.
மீட்கப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு ரூ.30 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கோயிலுக்கு அருகில் உள்ள மடத்துக்குள் 25க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்கள் இருந்ததால், அவற்றை போலீசார் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றி னர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், கோயில் இணை ஆணையர் குமரேசன், ஆர்டிஓ மந்தாகினி மற்றும் நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மடம் இடிக்க எதிர்ப்பு: பழுதடைந்த அம்மணி அம்மன் மடத்தையும் இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கு இந்து முன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இடிப்பு பணியை அதிகாரிகள் பாதியில் நிறுத்திவிட்டு சென்றனர்.
மேலும் செய்திகள்
ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்து இருக்க வாய்ப்பில்லை: சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!
கோயில் திருவிழாவுக்கு அழைத்து வந்தபோது லாரியில் இருந்து தவறி விழுந்த யானை சிகிச்சை பலனின்றி சாவு
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெட்ரோல் பங்க் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் தீ விபத்து
அதானி ஊழல் செய்தது குறித்து பேசினால் தேசத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகின்றனர்: மதுரையில் கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை
கோவை சாலைத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: சட்டகல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!