மதுரை ரயில் நிலையத்தில் 3 மாத கைக்குழந்தை கடத்தல்: 2 மணி நேரத்தில் மீட்பு; இருவர் கைது
2023-03-19@ 00:21:32

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கரட்டூரை சேர்ந்தவர் ஹரிஷ்குமார். மனைவி சையது அலி பாத்திமா(25). இவர்கள் 3 மாத கைக்குழந்தை ஷாலினியுடன் மதுரை ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தனர். குழந்தையுடன் பிளாட்பாரத்தில் தூங்கினர். நேற்று அதிகாலை சையது அலி பாத்திமா எழுந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. புகாரின்படி திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது குழந்தையை மர்ம நபர் ஆட்டோவில் கடத்திச் செல்வது தெரியவந்தது. விசாரணையில், மதுரை மாவட்டம், மேலூர் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த போஸ்(35)என்பவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. அவரை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர். உடந்தையாக இருந்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த கலைவாணி(33)யும் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாரை, கமிஷனர் நரேந்திரன் நாயர் பாராட்டினார்.
மேலும் செய்திகள்
திருமண நிதிக்கு லஞ்சம் பெண் அலுவலர் கைது
ரூ.85 கோடி மோசடி 5 பேர் கைது
வண்ணாரப்பேட்டை மற்றும் மைலாப்பூர் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள் கைது: 26.1 கிலோ கஞ்சா பறிமுதல்
இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகர்கோவில் பாதிரியாரை கைது செய்தது தனிப்படை போலீஸ்!!
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியின் மனைவி, மைத்துனர் கைது: 3 சொகுசு கார், 400 கிராம் நகை பறிமுதல்
குண்டாசில் 67 பேர் கைது
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!