வெலிங்டன் டெஸ்டில் வில்லியம்சன், நிகோல்ஸ் இரட்டை சதம் விளாசல்
2023-03-19@ 00:14:37

வெலிங்டன்: இலங்கை அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்திருந்தது. கேன் வில்லியம்சன் 26 ரன், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் இரட்டை சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 363 ரன் சேர்த்தது.
வில்லியம்சன் 215 ரன் (296 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்), டேரில் மிட்செல் 17 ரன் எடுத்து பெவிலியன் திருபினர். நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நிகோல்ஸ் 200 ரன் (240 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்), பிளண்டெல் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்துள்ளது. ஒஷதா 6 ரன் எடுக்க, குசால் டக் அவுட்டானார். கேப்டன் கருணரத்னே 16 ரன், பிரபாத் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.
மேலும் செய்திகள்
துபாயில் நடந்த பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பிரீமியர் லீக்
இண்டியன் வெல்ஸ் வெற்றி இரட்டையர்
சில்லி பாயிண்ட்ஸ்
ஸ்டார்க் வேகத்தில் சரிந்தது இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
இந்திய அணி 15 ஓவர்களில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி: விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!