பிஎன்பி பாரிபா ஓபன்: பைனலில் எலனா ரைபாகினா
2023-03-19@ 00:14:34

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, எலனா ரைபாகினா (கஜகஸ்தான்) தகுதி பெற்றார். அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் (போலந்து) மோதிய ரைபாகினா அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 6-2, 6-2 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.
மற்றொரு அரையிறுதியில் பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலெங்கா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் மரியா சாக்கரியை (கிரீஸ்) 1 மணி, 23 நிமிடத்தில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் ரைபாகினா - சபலெங்கா மோதுகின்றனர். இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்) - யானிக் சின்னர் (இத்தாலி), மெத்வதேவ் (ரஷ்யா) - பிரான்சிஸ் டியபோ (அமெரிக்கா) மோதுகின்றனர்.
மேலும் செய்திகள்
துபாயில் நடந்த பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பிரீமியர் லீக்
இண்டியன் வெல்ஸ் வெற்றி இரட்டையர்
சில்லி பாயிண்ட்ஸ்
ஸ்டார்க் வேகத்தில் சரிந்தது இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
இந்திய அணி 15 ஓவர்களில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி: விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!