பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறோம்: இந்திய துணை தூதர் பேச்சு
2023-03-19@ 00:14:22

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை இந்தியா ஒருபோதும் நிறுத்தவில்லை என்று அந்நாட்டிற்கான இந்திய துணை தூதர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் வர்த்தக மற்றும் தொழில்துறை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாகிஸ்தானுக்கான இந்திய துணை தூதர் சுரேஷ் குமார் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா எப்போதும் பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகின்றது.
ஏனென்றால் நமது புவியியல் அமைப்பை நம்மால் மாற்ற முடியாது. பாகிஸ்தானுடன் இயல்பான உறவை நோக்கி செல்வதற்கே இந்தியா விரும்புகின்றது. இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியபோதும் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை இந்தியா ஒருபோதும் நிறுத்தவில்லை. உறவுகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படக்கூடிய முதன்மையான நடவடிக்கை வர்த்தக உறவுகளை சீராக்குவதே ஆகும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
சீனாவிடம் கடன் வாங்குவதில் வங்கதேசம் கவனமாக உள்ளது: ஷேக் ஹசீனா தகவல்
மோடி கொடுத்த பரிசு பற்றி கணக்கு காட்டவில்லை: டிரம்ப் மீது குற்றச்சாட்டு
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி: சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
இங்கிலாந்து பிரதமரிடம் இந்திய மாணவர்கள் மனு
இந்திய தூதர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை
ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்து பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!