கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்: அண்ணாமலைக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு
2023-03-18@ 21:05:21

நெல்லை: பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நெல்லையில் அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை எந்தக் கட்சியும் தனியாக போட்டியிடவில்லை. காங்கிரஸ், பா.ஜ., திமுக என அனைவரும் கூட்டணி சேர்ந்து தான் போட்டியிடுகின்றன. பா.ஜ. தனித்துப் போட்டியிடும் என அண்ணாமலை கூறியிருப்பது, அவரது சொந்த கருத்து. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதுதான் இறுதி முடிவு. கருத்துக் கூற எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது. அதிமுகவில் ஆதி ராஜாராம் கூறியிருப்பது, அவரது சொந்த கருத்து. எடப்பாடி பழனிச்சாமி, பொதுச் செயலாளராக தேர்வாகிறார்.
பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் பொதுச் செயலாளர் ஆவார். ஒரு கட்சி என்றால் பொதுச் செயலாளர் வந்து தானே ஆக வேண்டும். பா.ஜ. விலிருந்து பிரிந்து சென்றவர்கள், நயினார் நாகேந்திரன் கூட அதிருப்தியில் இருப்பதாக கூறியிருக்கிறார்களே என்கிறீர்கள். எனது கருத்தை நான் தான் பிரதிபலிக்க முடியும். வேறு யாரும் பிரதிபலிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவுடன் கூட்டணி என்றால் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று அண்ணாமலை கூறிய நிலையில், அவரது கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கூறியது அவரது சொந்த கருத்து. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறியிருப்பது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
பெண்களுக்கான பொற்காலம் ...இலவச பேருந்து, மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, சிறப்பு புத்தொழில் இயக்கம் : பட்ஜெட்டில் அசத்தல்!!
செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!
அண்ணாசாலையில் மேம்பாலம்.. தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர்..: தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான அசத்தல் அறிவிப்புகள்!!
ஈரோட்டில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' , மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் : தமிழக பட்ஜெட் 2023
தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்.. அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா : தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் : பட்ஜெட்டை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு!!
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!