கோயம்பேடு மார்கெட்டுக்கு கோடை கால பழங்கள் வரத்து அதிகரிப்பு
2023-03-18@ 00:23:57

சென்னை: கோடை வெயில் தாக்கம் அதிரித்துள்ளதால் பழங்கள், பழரசம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிக அளவில் சுவைக்க தொடங்கியுள்ளனர். இதனால் நீர்ச்சத்து பழங்கள் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து தினமும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் சாத்துக்குடி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆரஞ்சு பழங்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. திராட்சை, மாதுளை பழங்களும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் வருகிறது.
ஆந்திராவில் இருந்து 15க்கும் மேற்பட்ட லாரிகளில் கிர்ணி பழங்களும் வருகிறது. மேலும், கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழங்கள் ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் கோடை கால பழங்கள் வாங்க கோயம்பேட்டில் மக்களும், சிறு வியாபாரிகளும் குவிந்த வண்ணம் உள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து ஆரஞ்சு, திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களும் லாரிகளில் வந்த வண்ணம் உள்ளன. எனவே, மொத்த விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.40 முதல் 60 வரையிலும், ஆரஞ்சு ரூ.60 முதல் ரூ.100 வரையிலும், திராட்சை ரூ.40 முதல் ரூ.50க்கும், தர்ப்பூசணி ரூ.15 முதல் 20க்கும், கிர்ணி பழம் ரூ.20 முதல் ரூ.25க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
Tags:
Koyambedu market summer season fruit arrival increase கோயம்பேடு மார்கெட்டு கோடை கால பழங்கள் வரத்து அதிகரிப்புமேலும் செய்திகள்
14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் 2030க்குள் செயல்படுத்தப்படும்: ரூ.77,000 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: மொழிப்போர் தியாகிகளுக்கு சென்னையில் நினைவிடம் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் 591 பேருக்கு இலவச பஸ் பாஸ்
தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.38.25 கோடியில் கண்காணிப்பு கேமரா
தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: தொழில் முனைவோர்களாக மாறும் தூய்மை பணியாளர்கள்
தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: இலங்கை தமிழர்களுக்கு 2ம் கட்டமாக 3,959 வீடு கட்டரூ.223 கோடி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!