SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார்

2023-03-17@ 17:59:28

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், காமெட் என்ற பெயரில் சிறிய எலக்ட்ரிக் காரை இந்தியாவில் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த காரின் மாதிரி, கடந்த வாரம் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. காரின் முன்புறம் சார்ஜிங் போர்ட், ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு ஹெட்லேம்ப்கள், எல்இடி  டிஆர்எல், டூயல் டோன் பம்பர் , செங்குத்தான டெயில் லேம்ப்கள் என அசத்தலான மினி காராகக் காட்சியளிக்கிறது. முழுமையான பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன.

இதில், 17.3 கிலோ வாட் அவர் பேட்டரி மற்றும் 26.7 கிலோவாட் அவர் பேட்டரி என 2 வித தேர்வுகளில் வருகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால்  முறையே அதிகபட்சமாக 200 கி.மீ மற்றும் 300 கி.மீ வரை செல்லலாம். வெள்ளை, நீலம், பச்சை, மஞ்சள், பிங்க் வண்ணங்களில் வெளிவர உள்ளது. விலை சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சத்துக்குள் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியோகோ இவி மற்றும் சிட்ரான் இசி3 ஆகியவற்றுக்கு போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்