சீனாவில் திடீர் புழு மழை: மக்கள் பீதி
2023-03-12@ 00:40:51

பெய்ஜிங்; சீன தலைநகர் பெய்ஜிங்கில் வானில் இருந்து திடீரென புழு மழை பெய்ததால் மக்கள் பீதி அடைந்தனர். சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது திடீரென புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்த காட்சிகள் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன. அதுபற்றிய வீடியோவில் வரிசையாக நிற்கும் கார்களின் மீது பெரிய, தடிமனான அளவுள்ள, பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் போர்வை போன்று புழுக்கள் போன்ற உயிரினம் படர்ந்து காணப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென இதுவரை தெரியாதபோதும், பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு இவை இந்த பகுதியில் மேலிருந்து கீழே போடப்பட்டு இருக்கும் என மதர் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகை தெரிவிக்கின்றது.
எனினும், சீன பத்திரிகையாளரான ஷென் ஷிவெய் கூறுகையில்,’ வீடியோ போலியானது. நான் பீஜிங் நகரிலேயே இருக்கிறேன். சமீப நாட்களாக பெய்ஜிங்கில் மழைப்பொழிவே இல்லை’ என தெரிவித்து உள்ளார். புழுக்கள் கீழே விழுவது இயல்பானது என்றும் வசந்த காலத்தின்போது இதுபோன்று ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். ஒரு சிலர், அவை புழுக்கள் அல்ல என்றும் அவை கம்பளிப்பூச்சிகள் என்றும் கூறுகின்றனர்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி
ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!