சென்னையில் பிப். 11ம் தேதி பிப்ரவரி மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிப்பு
2023-02-09@ 18:46:02

சென்னை: பிப். 11ம் தேதி பிப்ரவரி மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி- 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 11.02.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மின் வேலியில் சிக்கி யானைகள் பலியாகும் விவகாரத்தில் அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: காவல்துறை ஐகோர்ட்டில் தகவல்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!