இந்தியாவின் எந்த வெற்றியிலும் அவரது பங்களிப்பு மகத்தானது; புஜாராவின் சாதனைகள் போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை: சச்சின் டெண்டுல்கர் பேட்டி
2023-02-09@ 15:26:57

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அளித்துள்ள பேட்டி: சூர்யகுமார் யாதவ் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், இப்போது டெஸ்ட் அணியிலும் நுழைந்ததில் இருந்து, உலகம் முழுவதும் நம்பமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் வித்தியாசமாக இருக்கும். சூர்யா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் தயாராக இருக்கிறார். கே.எல்.ராகுல் மற்றும் சுப்மான் கில் ஆகியோருடன் அவரது திறமையுள்ள ஒருவரைக் கருத்தில் கொள்ள வேண்டும். மூவரும் திறமையான வீரர்கள், நான் இங்கு எந்தத் தீர்ப்பையும் வழங்க விரும்பவில்லை, ஆனால் மூவருமே அணியில் இடம்பிடிக்கும் அளவுக்கு திறமையானவர்கள்.
நான் ஆடும் லெவன் அணி குறித்து எதுவும் தெரிவிக்கவிரும்பவில்லை. ஆனால் சமீப காலத்துக்குச் சென்றால், சுப்மான் கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார், ராகுலால் பங்களிக்க முடியவில்லை, ஆனால் அதுதான் கிரிக்கெட் வாழ்க்கை. நீங்கள் இந்த ஏற்ற தாழ்வுகளை கடந்து செல்கிறீர்கள். அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள் மற்றும் அணியில் நிலைப்பாட்டை தக்கவைக்க, தொடர்ந்து ரன்களை எடுக்க வேண்டும். விராட் கோஹ்லி பார்முக்கு திரும்பியது அணிக்கு நல்லது. கடந்த சில மாதங்களில் அவர் விளையாடிய விதத்தில், அவர் என்ன செய்ய விரும்புகிறார் என தெரிகிறது. மிகவும் உறுதியான, அதைப் பார்க்க நான் மிகவும் விரும்பினேன், என்றார்.
நாதன்லயன்-கோஹ்லி இடையிலான போட்டி குறித்த கேள்விக்கு, “உலக கிரிக்கெட்டுக்கு இதுபோன்ற போட்டிகள் தேவை. இந்த போட்டிகள் இருப்பது முக்கியம். 1998ல் ஆஸ்திரேலியா இங்கு வந்தபோது, அது வார்னே- டெண்டுல்கர் மோதல் என அழைக்கப்பட்டது, அது வார்னே -டெண்டுல்கர் அல்ல, ஆஸ்திரேலியா - இந்தியா என்பதை அனைவருக்கும் நினைவூட்ட வேண்டியிருந்தது. ஆனால் இதுபோன்ற போட்டிகளை அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள், என்றார். டெல்லி கோட்லா மைதானத்தில் நடைபெறும் தொடரின் 2வது டெஸ்ட்டில் புஜாரா 100 டெஸ்ட் மைல்கல்லை எட்ட உள்ளார். 98 போட்டிகளில் அவர் 7ஆயிரத்்திற்கு மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
அவர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சச்சின், புஜாராவின் சாதனைகள் போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் அணியில் அவரது முக்கியத்துவம் பொதுவாக போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை என்று நான் உணர்கிறேன். அவர் நாட்டிற்காக அற்புதமாக விளையாடியுள்ளார். இந்திய அணி எந்த வெற்றியைப் பெற்றாலும் அவரது பங்களிப்பு மகத்தானது, என்றார். புஜாரா தனது டெஸ்ட் அறிமுகத்தில் அரை சதம் அடித்தபோது மறுமுனையில் சச்சின் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாக்பூர் பிட்ச் குறித்த கேள்விக்கு, நீங்கள் சர்வதேச கிரிக்கெட் வீரராகும்போது உலகின் எந்த ஆடுகளத்திலும் நீங்கள் விளையாட வேண்டும். இது தான் வெளிநாட்டு பயணங்களின்போது உள்ள சவால்கள். நாங்கள் ஆஸ்திரேலியா செல்லும்போது பந்து சுழலும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆடுகளத்தின் தன்மை சிறிய பவுன்சருடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். அதேபோன்று தான் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது ஆடுகளம் சுழலுக்கு சாதகமானதாகவும், ஆடுகளம் மிகவும் மெதுவானதாக இருக்கும் என்று அவர்களுக்கு தெரியும். பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலிய அணி நன்றாக தயாராகியுள்ளது, என்றார்.
ரிஷப் பன்ட் கன்னத்தில் அறைவேன்-கபில்தேவ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்அளித்துள்ள பேட்டி: நான் ரிஷப் பன்ட்டை மிகவும் நேசிக்கிறேன். அவர் நலமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பன்ட் இல்லாதது இந்திய அணியை சிதைத்து விட்டது. அவர் நலம் பெற்றதும் நான் சென்று அவரை கடுமையாக அறைவேன். ஏனென்றால் நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் தவறு செய்யும் போது அறையும் உரிமை பெற்றோருக்கு இருப்பதைப் போல, குணமடைந்த பிறகு பன்ட்டை அறைய விரும்புகிறேன், என தெரிவித்துள்ளார்.
பிட்ச் பற்றி பேச ஆஸி.க்கு தகுதி இல்லை-கவாஸ்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: நாக்பூர் பிட்ச் குறித்து ஆஸ்திரேலியா பேசுவது வியப்பானது. சுழற்பந்து வீச்சை சரியாக விளையாடுவது ஒரு சிறந்த பேட்ஸ்மேனின் அடையாளம். சுழலுக்கு சாதகமான நாக்பூர் ஆடுகளம் இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும். அண்மையில் பிரிஸ்பேனில் நடந்த தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் 2 நாட்களில் முடிந்தது. அந்த ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது. எனவே ஆடுகளம் பற்றி ஆஸி. பேசுவதற்கு தகுதி இல்லை. ஆசிய துணை கண்டத்தில் உள்ள ஆடுகளங்கள் முதல் நாளில் இருந்ேத ஸ்பின்னர்களுக்குசாதகமாக இருக்கும். ஒரு பேட்டருக்கு ஸ்பின் விளையாடுவது கடும் சவாலாக இருக்கும். அதனால்தான் துணைக் கண்டத்தில் சதம் அல்லது அதற்கு மேல் அடிப்பவர்கள் சிறந்த பேட்டர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள், என்றார்.
மேலும் செய்திகள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் விலகல்: சிக்கலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
2-1 என ஒரு நாள் தொடரை இழந்ததால் தரவரிசையில் முதல் இடத்தை இழந்த இந்தியா: ஆஸ்திரேலியா நம்பர் 1 இடத்தை பிடித்தது
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட்: நடராஜனுக்கு வாய்ப்பு
ஐபிஎல் கோப்பை ஆர்சிபி அணிக்குதான்: ஸ்ரீசாந்த் சொல்கிறார்
ஆஸ்திரேலியாவுடனான 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்தார் சூரியகுமார் யாதவ்
பதக்கம் உறுதி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!