துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைப்பு: சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்
2023-02-09@ 14:50:10

ஒடிசா: துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. துருக்கி - சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது.
நிலநடுக்கங்களால், ஏற்பட்ட சேதங்களை அப்புறப்படுத்த உலக நாடுகள் மீட்புப் படைகளை அனுப்பியுள்ளன. துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,035 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12 ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 3 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளனர்.
50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில், துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.
அதில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற கைகோருங்கள் என்ற செய்தியுடன் ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளுடன் ஒரு சிறுவனின் உடல் இருப்பதாகவும் சித்தரித்துள்ளார். இந்த மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பதிவில் புகைபடத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
மேலும் செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்