SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கும் : டிடிவி தினகரன் விளாசல்!!

2023-02-09@ 12:55:51

தஞ்சை : எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாள் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,' குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் உச்ச நீதிமன்றம் செல்ல முடியவில்லை. நிச்சயம் உச்சநீதிமன்றம் குக்கர் சின்னத்தை ஒதுக்கி இருக்கும். தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் எங்களை நிர்பந்திக்கவில்லை

எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்கு மிக்க மேஜிக் சின்னமாக  இருந்தது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு பிறகு இரட்டை இலை சின்னத்துக்கான செல்வாக்கு குறைந்துவிட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே ஈபிஎஸ் தரப்பு பெற முடியும். இரட்டை இலையை வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது ஊரறிந்த உண்மை. இரட்டை இலை  ஈபிஎஸ்ஸை சார்ந்து இருக்குமேயானால் தமிழ்நாட்டில் செல்வாக்கை இழக்கும். ஏனென்றால் அதிமுகவை ஒரு பிராந்திய கட்சியாக எடப்பாடி பழனிசாமி கொண்டு சென்றுவிட்டார். தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து 12-ந் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும்,'என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

  • fredddyyy326

    தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!

  • dubai-helipad

    துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்