SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துருக்கியை புரட்டி போட்ட நிலநடுக்கம்: 62 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண்..!!

2023-02-09@ 11:12:35

துருக்கி: துருக்கியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு 62 மணி நேரத்திற்கு பிறகு பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். காசியன்டெப் என்ற இடத்தில் கட்டிட குவியல்களை அப்புறப்படுத்தியபோது பெண் உயிருக்கு போராடியது தெரியவந்தது. இதையடுத்து மீட்பு குழுவினர் அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துருக்கியின் ஹாட்டி மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் பள்ளம் காணப்படுகிறது. வான் வழி காட்சியை பார்க்கும் போது இதனை சரி செய்ய பல வருடங்கள் ஆகும் என்பது தெளிவாகிறது.

இதுபோன்று கட்டிடங்கள் இடிந்து தூள் தூளாக காணப்படுகிறது. இதிலிருந்து எவரேனும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், மீட்பு குழுவினர் பணிகளை தொடர்ந்து வருகின்றனர். ஊரே தூள் தூளாக மாறிய நிலநடுக்க வான்வழி காட்சிகளால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்