2023க்குள் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.. சுணக்கம் கூடாது.. விரைந்து செயல்படுங்கள் : அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!
2023-02-09@ 10:53:21

சென்னை :சென்னை தலைமை செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பெரியார் சமத்துவபுரம், கிராம சுய உதவி குழுக்கள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாட்டில் நல்லாட்சியை நாம் நடத்தி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கோடிக்கு மேல் பயன் அடைந்துள்ளனர் அடைந்துள்ளனர். 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக திமுக அரசு உள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆண்டு காலம் பெரும் தொய்வு ஏற்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 20 மாத காலத்தில் ஏரளாமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், லட்சக்கணக்கான பெண்களின் பாராட்டுகளை பெற்றது. காலை உணவு திட்டத்தால் பயன் அடைந்தோர் அரசை பாராட்டி வருகின்றனர்.
மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனை கிண்டியில் கட்டப்பட்டு வருகிறது. எனவே 20 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் கண்ணுக்கு முன்னாள் கொண்டு வந்து அதனை செயல்படுத்துங்கள்.திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் கூடாது. அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். அறிவிக்கும் திட்டங்களை தொடர்ந்து ஆய்வு செய்தால் வெற்றிகரமாக முடியும். 2023க்குள் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்,'என்றார்.
மேலும் செய்திகள்
பெண்களுக்கான பொற்காலம் ...இலவச பேருந்து, மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, சிறப்பு புத்தொழில் இயக்கம் : பட்ஜெட்டில் அசத்தல்!!
செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!
அண்ணாசாலையில் மேம்பாலம்.. தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர்..: தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான அசத்தல் அறிவிப்புகள்!!
ஈரோட்டில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' , மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் : தமிழக பட்ஜெட் 2023
தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்.. அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா : தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் : பட்ஜெட்டை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!
துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!