துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!..
2023-02-09@ 09:21:30

துருக்கி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இந்த நிலையில், இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12,391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2,992 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கடும் பனிப்பொழிவுக்கு இடையே கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில், மீட்பு படையினர் தீவிரம் அடைந்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு!
ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரிப்பு
போர் கப்பல் விரட்டியடிப்பு சீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு.
இந்திய தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: இங்கி. வெளியுறவு அமைச்சர் பேச்சு
தவறாக வழி நடத்திவிட்டேன் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி