கட்சியை அடமானம் வைத்ததால் ஓபிஎஸ் அணி நிர்வாகி திமுகவுக்கு ஆதரவு: பாஜ பிரமுகரும் முழுக்கு
2023-02-09@ 02:19:33

தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவரும், அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான கா.லியாகத் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி நேற்று ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜி ஆகியோரை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் லியாகத் அலிகான் கூறுகையில், ‘2017 வரை எம்ஜிஆர் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வந்தேன்.
அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்தேன். சமீபகாலமாக பாஜவின் சித்து விளையாட்டுளில் ஓபிஎஸ் சிக்கி கட்சியை அடமானம் வைத்துவிட்டார். பாஜவின் கைப்பாவையாக செயல்பட்டதோடு, இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் தனது நிலைப்பாட்டை மாற்றி வரும் ஓபிஎஸ்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகியதோடு நான் நடத்தி வரும் எம்ஜிஆர் இயக்கம் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கினால் கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்’ என்றார். இதேபோல பாஜ மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி சீனிவாசன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அப்போது முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் உடனிருந்தார்.
மேலும் செய்திகள்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை தெரியப்படுத்தியது அதிமுக: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சமர்ப்பிப்பு..!
அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம்: டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு..!
கலாஷேத்ராவில் பாலியல் புகார்.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
ஆரணி கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு அதிமுக தலைவர் பதவி பறிப்பு
அதிமுக - பாஜ கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் திடீர் வாழ்த்து: நடந்தது என்ன?
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!