83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு ஓபிஎஸ் அணி மனு தள்ளுபடி
2023-02-09@ 02:14:20

ஈரோடு கிழக்கு ெதாகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. மனு தாக்கல் செய்த 96 வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில் நடைபெற்ற பரிசீலனையில் 121 வேட்புமனுக்களில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்புமனுவில் அதிமுக என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதிமுக தலைமையில் இருந்து ஏ, பி படிவங்கள் இணைக்கப்படாமல் இருந்தது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்பட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
நாளை (10ம் தேதி) மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பு மனு ஏற்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில் 191 சின்னங்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மேலும் செய்திகள்
செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!
அண்ணாசாலையில் மேம்பாலம்.. தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர்..: தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான அசத்தல் அறிவிப்புகள்!!
ஈரோட்டில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' , மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் : தமிழக பட்ஜெட் 2023
தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்.. அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா : தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் : பட்ஜெட்டை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு!!
‘அத்தைக்கு மீசை முளைத்தால் தான் சித்தப்பா...’ அதிமுக - பாஜ கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது: எச்.ராஜா பதிலடி
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!
துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!