சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!
2023-02-08@ 18:14:58

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களில் தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி இன்று (08.02.2023) மேற்கொள்ளப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியினைக் கட்டுப்படுத்த ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணி தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பக்கிங்ஹாம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் 07.02.2023 அன்று ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (08.02.2023) தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36 மற்றும் 37க்குட்பட்ட கேப்டன் காட்டன் கால்வாய், வார்டு-35 மற்றும் 37க்குட்பட்ட கொடுங்கையூர் கால்வாய், வார்டு-36 மற்றும் 45க்குட்பட்ட வியாசர்பாடி கால்வாய், வார்டு-38, 41 மற்றும் 47க்குட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், வார்டு-41க்குட்பட்ட லிங்க் கால்வாய்களிலும், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139க்குட்பட்ட ஆர்.வி. நகர் கால்வாய், வார்டு-141க்குட்பட்ட மாம்பலம் கால்வாய், வார்டு-127, 129 மற்றும் 130க்குட்பட்ட விருகம்பாக்கம் கால்வாய், வார்டு-137, 138, 139 மற்றும் 142க்குட்பட்ட அடையாறு ஆறு ஆகியவற்றிலும்,
அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36க்குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் இன்று (08.02.2023) ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணியினை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
குறும்படங்கள் வாயிலாக போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!
குஷ்புவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கு ஆபத்து?: 'மோடி' பெயரை விமர்சித்த டிவீட்டை வைரலாக்கிய நெட்டிசன்கள்
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்
ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி