SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடு முழுவதும் 16.73 லட்சம் மின்சார வாகனங்கள் ஓடுது: ஒன்றிய அமைச்சர் தகவல்

2023-02-08@ 17:49:16

டெல்லி: ஒன்றிய அரசின் கனரகத் தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார், மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பேட்டரியின் விலைகளைக் குறைக்கும் வகையில், மேம்பட்ட வேதியியல் செல்களை  உற்பத்தி செய்வதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத்  திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.25,938 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது; மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்  பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பச்சை நிற உரிமத் தகடுகள் வழங்கப்படுவதுடன்,  அனுமதி தேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1,69,006 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் 16,73,115 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன’ என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்