SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரு நாட்டில் பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு வலியுறுத்தல்

2023-02-08@ 17:48:07

இலிமாய்: பெரு நாட்டின் எட்டு பாதுகாக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் சமீபத்தில் 55,000 பெலிகன், பெங்குவின் பறவைகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில், அந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே கடல் பகுதிகளில் 585 கடல் சிங்கங்களும் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவையும் பறவை காய்ச்சல் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து ‘செர்னான்ப்’ வெளியிட்ட அறிக்கையில், ‘இறந்த கடல் சிங்கங்களின் உடலில் ஹெச்5என்1 வகை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. அதையடுத்து பெருவின் தேசிய வன மற்றும் வனவிலங்கு சேவை வெளியிட்ட அறிக்கையில், ‘கடற்கரையில் கடல் சிங்கங்கள் மற்றும் கடல் பறவைகள் பறவைக் காய்ச்சலால் இறப்பதால், அதனுடனான தொடர்பை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்