பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கு: இலங்கை மாஜி அதிபரிடம் போலீஸ் விசாரணை
2023-02-08@ 17:46:49

கொழும்பு: பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த மக்கள், அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே (73), நாட்டைவிட்டு ஓடினார். முதலில் சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்துக்கும் சென்ற அவர், அதிபர் பதவியில் இருந்து விலகினார்.
தொடர்ந்து கடந்த செப்டம்பரில் தாய்நாடு திரும்பிய அவர், கொழும்பில் பலத்த பாதுகாப்புடன் அரசு பங்களாவில் தங்கியுள்ளார். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் சூழ்ந்துகொண்டு சூறையாடியபோது, ஏராளமான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, இலங்கை அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தில் ஏராளமான இலங்கை ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவரது தனி இல்லத்தில், மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த நிலையில் பறிமுதல்..!!
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் தலைகீழாக தரையில் விழுந்து தீப்பிடித்தது .. 4 பேர் உயிரிழப்பு!!
சீனாவின் விரைவான வளர்ச்சியை பற்றி சற்று பொறாமை கொள்கிறேன் : அதிபர் ஜின்பிங்கிடம் ரஷ்ய அதிபர் புதின் பேச்சு!!
காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் லண்டன் இந்திய தூதரகத்தில் தேசியக்கொடி அவமதிப்பு
மேலும் 9,000 ஊழியர்களை பணி நீக்க அமேசான் முடிவு
தாய்லாந்து நாட்டின் நாடாளுமன்றம் கலைப்பு: மே 7ம் தேதி பொது தேர்தல்
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!