SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பு; ஒரு நாளைக்கு 3,500 நிதி மோசடி புகார்: பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தகவல்

2023-02-08@ 17:45:11

டெல்லி: ஒன்றிய அரசின் சைபர் கிரைம் போர்டல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு 3,500 நிதி மோசடி புகார்கள் பதிவாவதாக சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கூறினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்எஸ் நப்பினை எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் ராஜேஷ் பந்த் பேசுகையில், ‘ஆன்லைன் நிதி மோசடி தொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒன்றிய அரசின் சைபர் கிரைம் போர்டல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஒரு நாளைக்கு 3,500 நிதி மோசடி புகார்கள் பதிவாகிறது.

ஒவ்வொரு நாளும், ஆன்லைனில் பணத்தை இழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள், விதவைகள் உள்ளிட்டோர் அதிகமாக உள்ளனர். சைபர் கிரைம் புகார்களை குற்றமாகக் கருத வேண்டுமா அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கட்டுப்படுத்த வேண்டுமா அல்லது சைபர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமா போன்ற விவாதங்கள் தொடர்கிறது, தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000-ல் திருத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்