SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2023-02-08@ 16:39:47

சென்னை: ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடான  முறையில் ஆவினில் விதிகளை மீறி வேலை  வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் விளைவாக பல சர்ச்சைகள் ஏற்பட்டது. ஆவினில் காலிபணியிடங்களை நிரப்பும் பணியை முறைப்படுத்தி, கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காத வகையில் டிஎன்பிஎஸ்சி மூலம்  ஆட்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதன்படிஆவினில் தற்போது காலியாக உள்ள 322 பணி இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆவின் பணிக்கான ஆட்சேர்க்கையும் அரசுக்கு சொந்தமான சட்டப்பூர்வமான வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், மேலும் மாநில அரசுக்கு கீழ் உள்ள அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்துதுறையில் ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இதற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்காக முன்பணமாக 97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வு விதிமுறைகள் இப்பணி தேர்வுகளுக்கும் விதிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆவின், போக்குவரத்து மற்றும் அரசுக்கு கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்