ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
2023-02-08@ 15:52:12

ஐதராபாத்: ரூ. 38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் நவீன் ரெட்டி என்பவரை ஐதராபாத் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தெலுங்கு திரைப்பட நடிகர் நவீன் ரெட்டி அட்லூரி (34), தனது நண்பரான கட்டா சரின் ரெட்டிக்கு சொந்தமான சொத்துகளை அபகரித்ததாகவும், ரூ.38 கோடி அளவிற்கு ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. கட்டா சரின் ரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன் நவீன் ரெட்டி அட்லூரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட நடிகர் நவீன் ரெட்டி, அவரது தொழில்முறை கூட்டாளியான கட்டா சரின் ரெட்டியின் கையொப்பத்தை போலியாக போட்டு 7.3 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார். அந்த நிலத்தை அவரது நண்பர் கல்யாண் ரெட்டிக்கு கடந்தாண்டு எழுதிக் கொடுத்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கல்யாண் ரெட்டி அந்த நிலத்தை நவீனின் தந்தை மாமா உபேந்தர் ரெட்டிக்கு மாற்றினார். மேலும் ரூ.6 கோடி மதிப்பிலான நிலத்தை சரின் ரெட்டிக்கு தெரியாமல் மாற்றியுள்ளார். திரைத்துறையிலும் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இதுகுறித்து சரின் ரெட்டி, நவீனை தட்டி கேட்ட போது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.38 கோடி அளவிற்கு மோசடி செய்த நவீன் ரெட்டி மீது ஐபிசி 420, 465, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நவீன் ரெட்டி கைது செய்யப்பட்டார்’ என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு
பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!
வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை: பல இடங்களில் வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!