SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநில அளவிலான வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை

2023-02-08@ 15:52:06

சென்னை: இன்று தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை 10வது தளத்தில் வனத்தீ மேலாண்மை குறித்த ஒரு நாள் கருத்துப் பட்டறை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்றது. இக்கருத்துப் பட்டறையை தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். வனங்கள் உருவான காலம் தொட்டு வனத்தீயும் இருந்து வருகிறது. வனத்தீ வனங்களுக்கு பேராபத்தை விளைவிக்க கூடியவை. வனத்தீ வன வளங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதல்லாமல் வனங்களின் உயிர்பன்மை, சூழழியல் மற்றும் சுற்றுச்சுழல் ஆகியவற்றிலும் பெரும் அழிவை ஏற்படுத்துகிறது.

2022ம் ஆண்டு ஏற்பட்ட 1500 தீ நிகழ்வுகளில் வனத்துறையின் களப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளால் 91 சதவீத பெரிய அளவிலான தீ நிகழ்வுகள் 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய வன அளவீடுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது. இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ள தமிழ்நாடு அரசு வனத்துறை நவீனப்படுத்த 52.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் வனத்தீ மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்காக 21.11 கோடி ரூபாய் அரசு விடுவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சென்னையில் ஒரு கோடி ரூபாய் செலவில் வனத்தீ கட்டுப்பாட்டு மையத்தை நிறுவ உள்ளது. இதேபோன்று 34 கோட்டங்களில் 6.80 கோடி ரூபாய் செலவில் வனத்தீ கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வின் போது கருத்துப் பட்டறையில் வனத்தீ மேலாண்மை தொடர்பான தொழில் நுட்பம் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்த கையேட்டினை தலைமைச் செயலாளர் அவர்கள் வெளியிட்டார்.

இந்த கையேடு வனத்தில் தீ ஏற்படுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தலைமைச் செயலாளர் அவர்கள் வனத்துறை தீ நிகழ்வுகளை உடனடியாக கண்காணிக்க தேவையான செயலியை அறிமுகப்படுத்தினார்கள் மற்றும் மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தீ தடுப்பு பணிகளை இணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். மேலும் வனத்துறையை மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தி மாவட்ட அளவில் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் தேவையான உபகரணங்களை அறிவுறுத்தினார்கள் அத்துடன் வனத்தீயை கட்டுப்படுத்த தீயினால் அதிக பாதிப்பு.

ஏற்படும் மாவட்டங்களில் இளைஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். தீத்தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்திறன் மிக்க தீ மேலாண்மை பணிகளுக்காக ரூ.5.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீத்தடுப்பு பணிகளில் உயிரிழக்கும் வனத்துறை பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் செய்யப்பட்டுள்ளது.

அரசு உதவித்தொகை வழங்கும் வகையில் அறிவிப்பு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப. அவர்கள் பேசும்போது காலநிலை மாற்றத்தால் பல புதிய சவால்களை வனத்துறையானது தீ தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக வனத்துறையானது புதிய தொழில்நுட்பங்களையும் அதை சார்ந்த அறிவுத் திறனையும் பெற்று அதன் மூலம் சிறந்த வனமேலாண்மையினை மேற்கொள்ளவுள்ளது என்பதை தெரிவித்தார்கள்.

இக்கருத்துப் பட்டறையில் கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் திரு.எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலர் திரு. குமார் ஜெயந்த், இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், வனத் துறை தலைவர் திரு. சுப்ராத் மஹாபத்ர, இ.வ.ப. வனத்துறை உயர் அலுவலர்கள், அனைத்து மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய வன நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்