ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா?: ரூ.15 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
2023-02-08@ 15:52:57

சென்னை: ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர் வருமான வரம்பை இப்போதுள்ள ரூ. 8 லட்சம் என்ற அளவிலிருந்து உயர்த்தும் திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.
நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாவிற்கு விடையளித்த ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திரகுமார், ‘‘பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பு இப்போது ஆண்டுக்கு ரூ.8 லட்சமாக உள்ளது. இதுவே போதுமானது என்று ஒன்றிய அரசு கருதுகிறது. இது தொடர்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து எந்த பரிந்துரையும் கோரப்படவில்லை’’ என்று கூறினார். ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.
விவசாயம், ஊதியம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் வருமானம் இல்லாமல் பிற ஆதாரங்களில் இருந்து ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுபவர்கள் கிரீமிலேயர் எனப்படும் வசதி படைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகிறார்கள். பணவீக்கமும், பிற செலவுகளும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்பது விதியாகும். இந்தியாவில் கிரீமிலேயர் வரம்பு கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம், ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. இந்த வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுப்பட்டு வரும் நிலையில், இப்போதுள்ள வரம்பே போதுமானது; இந்த வரம்பை உயர்த்த வேண்டியதில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு எவ்வாறு வந்தது? என்பது தெரியவில்லை.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு கிரீமிலேயர் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த பிரிவிலும் கூறப்படவில்லை. இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் கிரீமிலேயர் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. கிரீமிலேயர் முறையே தேவையற்றது எனும் போது, அதற்கான வருமான வரம்பை உயர்த்த முடியாது என்று மத்திய அரசு கூறுவது ஓபிசிக்கள் மீது நடத்தப்படும் இரட்டைத் தாக்குதலாக அமைந்துவிடும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 1993ம் ஆண்டில் கிரீமிலேயர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 1 லட்சமாக இருந்தது. அதன்பின் பணவீக்கமும், வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் உயராததால் 11 ஆண்டுகள் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. அதன்பின் 2004ம் ஆண்டில் 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் 2008-ஆம் ஆண்டில் ரூ.4.5 லட்சம், 2013ம் ஆண்டில் ரூ. 6 லட்சம், 2017ம் ஆண்டில் ரூ. 8 லட்சம் என 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 2020ம் ஆண்டிலும், நடப்பாண்டிலும் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். 2020ம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அதை ஈடு செய்யும் வகையில் நடப்பாண்டில் கிரீமிலேயர் வரம்பு இன்னும் கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது ஓபிசி வகுப்பினருக்கு இழைக்கப்படும் பெருந்துரோகம் ஆகும்.
2020ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று, ஓபிசி கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற வல்லுனர் குழு பரிந்துரைக்கு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவதற்காக நடைபெற்ற முயற்சி ஆகியவற்றின் காரணமாகவே 2020ம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படுவது தடைபட்டது. அதன்பின் 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இப்போதாவது கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.
2017ம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்ட பிறகு, பணவீக்கமும், வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றன. ஓபிசி வகுப்பினருக்கான கிரீமிலேயர் வரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப் பட வேண்டும் என்று 2015ம் ஆண்டிலேயே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்திருக்கிறது. அதன்பின் 8 ஆண்டுகளாகியும் அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் இருப்பது நியாயம் அல்ல. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அடுத்த சில மாதங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில், அதையும், அதிகரித்திருக்கும் பணவீக்கம் மற்றும் வருமானத்தையும் கருத்தில் கொண்டு ஓ.பி.சி. கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
சாதாரண மனிதனுக்கு என்ன பொருந்துமோ, அது தான் ராகுல் காந்திக்கும்: சட்டத்தின் அடிப்படையிலேயே தகுதி நீக்கம்: அண்ணாமலை பேச்சு
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் பொருட்கள் சேவை,வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: சீமான் கடும் கண்டனம்..!
சென்னையில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி