SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணி; வாகன பார்க்கிங் அமைக்க கடைகளை அகற்ற முடிவு: வியாபாரிகள் எதிர்ப்பு

2023-02-08@ 15:24:59

பூந்தமல்லி: மெட்ரோ ரயில் நிலைய 2ம் கட்ட பணியில், பார்க்கிங் அமைப்பதற்காக கடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்து நோட்டீஸ் வழங்கியுள்ளதால், பூந்தமல்லி வட்டார மார்க்கெட் காய்கறி மற்றும் இறைச்சி வியாபாரிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பூந்தமல்லி வட்டார மார்க்கெட் காய்கறி மற்றும் இறைச்சி வியாபாரிகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ஜாகீர் அப்பாஸ் தலைமையில் பூந்தமல்லி முல்லாதோட்டம் மார்க்கெட் பகுதியில் நேற்று நடந்தது. செயலாளர் நெல்லை ராஜா, பொருளாளர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்றது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் அஸ்வின் ராஜசிம்மா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கூட்டத்தில், மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிக்காக வாகன பார்க்கிங் அமைப்பதற்காக முல்லாத்தோட்டம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகமும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் வழங்கிய நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.  கூட்டத்துக்கு முன்பு வாகன பார்க்கிங் அமைப்பதற்காக அகற்றப்பட இருக்கும் கடைகளை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் பார்வையிட்டனர். அவர்களிடம், கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனுக்களை வியாபாரிகள் அளித்தனர்.

கூட்டத்தில். பாஜக மாவட் பொதுச்செயலாளர் ஆர்யா சீனிவாசன் மற்றும்  நிர்வாகிகள் மணிகண்டன், குமரேசன், சாகுல் ஹமீது, சண்முகம் மற்றும்  வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘பூந்தமல்லி முல்லாத்தோட்டம் பகுதியில் 2 தலைமுறைகளாக நகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடத்தில் காய்கறி, பழங்கள், இறைச்சி, மீன், மளிகைக்கடைகளை நடத்தி வருகிறோம். இப்பகுதியில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் வாகன பார்க்கிங் இடத்திற்காக ஏற்கனவே அருகில் உள்ள வெஸ்லி சர்ச் வளாகத்திலும், பனையாத்தம்மன் குட்டை பகுதியில் 18 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகமும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் தேர்வு செய்யப்பட்டு பணி துவங்கியது. தற்போது, பணி நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வியாபாரிகளின் வாழ்வாதாரமாக உள்ள முல்லாத்தோட்டம் கடைகளை அகற்ற இருப்பதாக கூறுகின்றனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென கடைகளை அகற்ற சொல்வதை ஏற்க முடியாது. இப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் கணவனை இழந்தவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான்  வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கக்கூடாது. ஏற்கனவே திட்டமிட்டபடி சர்ச் அருகிலும், பனையாத்தம்மன் குட்டை அருகிலும் உள்ள இடத்தில் வாகன பார்க்கிங் வசதி செய்யலாம்.

இதையும்மீறி கடைகளை அகற்றினால் வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இதுகுறித்து பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்” என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்