பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி கியாரா, சித்தார்த் திடீர் திருமணம்
2023-02-08@ 15:20:12

ஜெய்சால்மர்: பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது காதலியும், நடிகையுமான கியாரா அத்வானியை திடீரென்று திருமணம் செய்துகொண்டார். பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி இருவரும் நீண்ட நாட்களாக திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. 2018ல் வெளியான ஆந்தாலஜி படமான ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற படத்தின்போது அவர்கள் இருவரும் சந்தித்தனர். பிறகு கோலிவுட் இயக்குனர் விஷ்ணுவர்தன் 2021ல் இந்தியில் இயக்கிய ‘ஷெர்ஷா’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர். ஆனால், இப்படம் வெளியான பிறகும் அவர்கள் இருவரும் நெருக்கமாகப் பழகினர்.
அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதுபற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியானபோது, இருவருமே அதை மறுத்தனர். ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற இந்திப் படத்தில் நடித்த பிறகு கியாரா அத்வானி மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் திடீரென்று திருமண பந்தத்தில் இணைந்தனர். கியாரா அத்வானி சமூக வலைத்தளத்தில் தனது திருமண போட்டோக்களை வெளியிட்டு, ‘எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்’ என்று பதிவிட்டார்.
இத்திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி கலந்துகொண்டனர். தற்போது கியாரா அத்வானி, தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்கிறார். ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தி வெப்சீரிஸ் ஒன்றில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். திருமணம் செய்துகொண்ட காதல் ேஜாடி, தங்கள் ஹனிமூன் பயணத்தை ரகசியமாக வைத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகள்
கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு
பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு
புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!
வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை: பல இடங்களில் வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!