நாமக்கலில் ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து
2023-02-08@ 15:15:13

நாமக்கல்: நாமக்கலில் ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்லும் வாடகை லாரி டெண்டர் பெட்டியை தூக்கிக்கொண்டு சிலர் ஓட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிலர் மட்டும் டெண்டர் பெட்டிகளை பெட்டியில் சமர்ப்பித்த பின்னர் பெட்டியை தூக்கி கொண்டு ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல் வட்டத்துக்கு உட்பட்ட ரேசன் கடைகளுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்த டெண்டர் தான் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அறிவிப்பும் கடந்த மாதம் 20ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது நாமக்கல் பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு பொருள் எடுத்து செல்லும் டெண்டர் நேற்று மாலை 5 மணிக்கு துவங்கி இன்று 10.30 மணிக்கு டெண்டர் முடிவடைந்துளளது. அதன் பின்னர் டெண்டர் திறக்கப்பட்டு அதில் குறைந்த ஒப்பந்த புள்ளி கோரிக்கைகளுக்கு வாடகை ஒப்பந்தம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை இந்த டெண்டரானது நாமக்கல் கூட்டுறவு வேளாண்மை சங்க வளாகத்தில் டெண்டர் போடப்பட வேண்டும். அங்கே டெண்டர் பிரிக்கப்பட்டு டெண்டர் வழங்கப்படும் என்று தகவல் அறிவிக்கப்பட்டிருந்தது, இந்த நிலையில் காலை 10 மணி வரை டெண்டர் பெட்டி வைக்கப்படாத நிலையில் அங்கு டெண்டர் அளிக்க வந்த லாரி உரிமையாளர்கள், ஏன் இந்த டெண்டர் பெட்டிகளை வைக்கவில்லை என்று கேள்விகளை எழுப்பினர். 10.25 மணிக்கு வைக்கப்பட்டுள்ள டெண்டர் பெட்டியை சிலர் தங்கள் கொண்டுவந்த டெண்டர் படிவத்தை சமர்ப்பித்து உடனடியாக அந்த டெண்டர் பெட்டியினை தூக்கிவிட்டு சென்றனர் இதனை கண்ட மற்ற லாரி உரிமையாளர்கள் அவர்கள் ஏன் அந்த பெட்டியை தூக்கி செல்கிறார்கள் நீங்கள் ஏன் அதை அனுமதிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
இருந்த போதிலும் அவர்கள் வேகமாக அங்கிருந்து பெட்டியை எடுத்துச் சென்று அந்த சங்க வளாகத்தை விட்டு வெளிய சென்றுள்ளனர். இதனை அடுத்து அங்கு இருந்து வந்த லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் டெண்டர் பெட்டியை எடுத்து செல்கின்றனர் இதில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த செயல் குறித்து அதிகாரிகள் தற்போது டெண்டர் ரத்து செய்து இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி