'கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால் 2019ல் மீண்டும் பாஜக ஆட்சி': மாநிலங்களவையில் பாஜக அரசை உப்புமாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த திருச்சி சிவா..!!
2023-02-08@ 15:05:06

டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசையும், உப்புமாவையும் ஒப்பிட்டு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா கூறிய உவமை கதை அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. உப்புமா உணவை விரும்பாத கல்லூரி விடுதி மாணவர்கள், பிரிந்து இருந்ததால் மீண்டும் அவர்களுக்கு உப்புமா உணவு கிடைத்தது போல், பாஜக இரண்டாவது முறை ஆட்சியமைத்ததாக கூறிய திருச்சி சிவா, 2024ல் அது நடக்காது என தெரிவித்துள்ளார். மாநிலங்களையில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது, ஒரு கல்லூரி விடுதியில் எப்போதும் உப்புமா பரிமாறப்பட்டு வந்தது.
இதனால் எரிச்சலான மாணவர்கள், உப்புமா வேண்டாம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேறு வழி தெரியாததால் வாக்கெடுப்பு நடத்த விடுதி காப்பாளர் திட்டமிட்டார். வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 7 சதவீதம் பேர் ரொட்டியும், ஆம்லெட்டும் கேட்டு வாக்களித்தனர். 13 பேர் பூரி கேட்டிருந்தனர். 18 பேர் ஆலு பரோட்டா கேட்டிருந்தனர். 19 சதவீதம் பேர் மசாலா தோசை கேட்டு வாக்களித்தனர். 20 சதவீதம் பேர் தங்களுக்கு இட்லி கேட்டிருந்தனர். ஆனால் 23 சதவீதம் பேர் உப்புமாவுக்கே வாக்களித்தனர்.
இதனால் மீண்டும் அந்த விடுதியில் உப்புமாவே பரிமாறப்பட்டது. இந்த உப்புமாதான் 2019ல் வந்த பாஜக அரசு. எதிர்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லாததால் இப்படி நிகழ்ந்துவிட்டது. ஆனால் 2014க்கான பணிகளை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவிட்டார். அனைவரும் ஓரணியில் திரள்வது பற்றி ஆலோசிக்கிறோம். மாணவர்கள் ( கட்சிகள்) அனைவரும் ஒன்று சேருவோம். கூட்டாட்சித் தத்துவம், மதசார்பின்மை, அரசியலமைப்பு சட்ட மாண்புகளை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் விரைவில் 6ஜி தொலை தொடர்பு சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு!!
திடிரேன பற்றி எரிந்த குழந்தைகள் ஐசியூ: நல்வாய்ப்பாக 7 குழந்தைகள் உயிர் தப்பின
பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி: உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜக முடிவு
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500-ஆக உயர்வு: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்
சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை எப்போது?.. ஒன்றிய அரசு பதில்
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜஸ்தான் அரசின் சுகாதார உரிமை மசோதா: அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!