SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிப்.24, 25 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2023-02-08@ 14:43:07

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்.24, 25 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க உள்ளார். சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகை வெட்டு காட்டு வயசு 19-வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.  

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், திமுக சார்பில் பட்டியல் வெளியானதும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வார்டு வாரியாக நியமிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கை சின்னத்துக்கு வாக்கு கேட்கிறார். அதன்படி வரும் 24-ம் தேதி ஈரோடு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர், வெட்டு காட்டு வலசு 19வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கை சின்னத்திற்கு வாக்குசேகரிக்கிறார். அப்போது நாச்சாயி டீ கடை, பெரிய வலசு, அக்ரஹாரம் வண்டி பேட்டை, கேஎன்கே ரோடு, தெப்பகுளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை,  வெட்டுகாட்டு வலசு-19வது வார்டு, நாச்சாயி டீ கடை,  சம்பத் நகர், பெரியவலசு, குளம்-காந்திநகர், அக்ரஹாரம் வண்டிபேட்டை, சத்யா நகர், நெறிகல் மேடு, வைராபாளையம், கிருஷ்ணம்பாளையம்,  KNK ரோடு, ராஜாஜிபுரம், மெட்ராஸ் ஹோட்டல், எல்லை மாரியம்மன் கோவில் , முத்துசாமி வீதி, பழனிமலைக் கவுண்டர் வீதி, தெப்பகுளம், சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களில் 24.02.2023 அன்று முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை, டீச்சர்ஸ் காலனி வழியாக கிராமடை ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர் வழியாக ஜவான் பில்டிங், தங்க பெருமாள் கோவில் வீதி வழியாக கள்ளுக்கடை மேடு, பழைய ரயில்வே ஸ்டேசன் ரோடு,  சமாதானம்மாள் சத்திரம், பேபி மருத்துவமனை வழியாக மரப்பாலம், மண்டப வீதி வழியாக காரைவாய்க்கால், வளையக்கார வீதி, இந்திரா நகர், கருங்கல்பாளையம், கோட்டையார் வீதி, ரங்கநாதர் வீதி வழியாக சின்னமாரியம்மன் கோவில் மைதானம், காந்தி சிலை மணிக்கூண்டு, சித்திக் திடல், அசோகபுரி, நேதாஜி ரோடு சென்ட்ரல் தியேட்டர், பன்னீர் செல்வம் பார்க், சக்திசுகர்ஸ் விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களில் 25.02.2023 அன்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். இப்பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்