SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!

2023-02-08@ 11:00:27

துருக்கி: துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், 3 மாத காலத்திற்கு அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான இந்த பூகம்பத்தால், ஹத்தே, அடியமான், அங்காரா, சிவரன் உள்ளிட்ட நகரங்களில் கட்டடங்கள் தரைமட்டமாகின. சக்திவாய்ந்த பூகம்பத்தை  தொடர்ந்து 7.5 மற்றும் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்களும், 150க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டது. இதனால் துருக்கியில் சுமார் 6 ஆயிரம் பேர், சிரியாவில் சுமார் 2 ஆயிரம் பேர் என மொத்தமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இரு நாடுகளிலும், பல நகரங்கள் சிதைந்து கான்கிரீட் குப்பைகளாக காட்சியளிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய நிலையில், மழை மற்றும் கடும் குளிர் மீட்புப்பணிக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதுவரை 10 ஆயிரதத்திற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த 3 மாதங்களுக்கு அவசர நிலையை அதிபர் எர்டோகன் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்