தமிழ் மகன் உசேன் பேட்டி தேர்தல் பிரசாரத்துக்கு ஓபிஎஸ் அழைக்கப்படுவாரா?
2023-02-08@ 01:15:13

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, ஓபிஎஸ்சை அழைப்பது குறித்து, கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் குறித்து தேர்தல் ஆணையம் விதித்த உத்தரவுக்கு இணங்க, பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களுடன் டெல்லி சென்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், நேற்றுமுன்தினம் நள்ளிரவு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ்சை பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து, கட்சி தலைமைதான் முடிவு செய்யும். தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை, எங்களுக்கு ஒதுக்கியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி’’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
கூட்டணி குறித்து கேட்காதீங்க... அது மேலிடம் பார்த்துக்கும்... அண்ணாமலை கப்சிப்
இபிஎஸ், ஓபிஎஸ்சை இணைத்து அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன்: சசிகலா பேட்டி
ராகுல் பதவி பறிப்பு அராஜக நடவடிக்கை: தமிமுன் அன்சாரி கண்டனம்
நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்
சட்டம் தனக்கு பொருந்தாது என நினைப்பவர்தான் ராகுல்
30 நாள் காத்திருக்குமா தேர்தல் ஆணையம்?
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி