நாக்பூரில் நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம்; 4 ஸ்பின்னர்களுடன் களம் இறங்க இந்தியா திட்டம்
2023-02-07@ 16:44:25

நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்டடெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த தொடரை வென்றால் தான் இந்தியா டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்கு தகுதிபெற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. முதல் டெஸ்ட் நாளை மறுநாள் நாக்பூரில் தொடங்க உள்ளது. இந்நிலையில், பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் நாளில் இருந்தே பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.
இதனால் இந்திய அணி அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களின் மிகப்பெரிய பலம், அவர்களுக்கு பந்துவீசுவதற்கும், விக்கெட் பெறுவதற்கும் சிறந்த சூழ்நிலையை நாங்கள் வழங்க வேண்டும். நிச்சயமாக, போட்டியின் முந்திய நாளிலோ அல்லது காலையில் பிட்ச்சை பார்வையிட்ட பிறகு ஆடும் லெவனை தேர்வு செய்வோம். ஆனால் நான்கு ஸ்பின்னர்கள் நிச்சயமாக எங்கள் திட்டத்தில் உள்ளனர், ஏனெனில் எங்களிடம் நான்கு தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர், என இந்திய அணி நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன்லயன் பவுலிங்கை எதிர்கொள்ளும் வகையில் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியாளர் டிராவிட் ஆலோசனை படி அவர்கள் ஸ்வீப் ஷாட் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
2வது டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் தோல்வி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
கிரேஸ் ஹாரிஸ் அதிரடி ஜயன்ட்சை வீழ்த்தியது வாரியர்ஸ்: பிளேஆப் ஆட்டத்துக்கு தகுதி
துபாயில் நடந்த பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பிரீமியர் லீக்
இண்டியன் வெல்ஸ் வெற்றி இரட்டையர்
சில்லி பாயிண்ட்ஸ்
ஸ்டார்க் வேகத்தில் சரிந்தது இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!