SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹீரோ ஜூம்

2023-02-06@ 17:20:14

ஹீரோ நிறுவனம், ஹீரோ ஜூம் என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் எல்எக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என்ற 3 வேரியண்ட்கள் உள்ளன. ஷோரூம் விலையாக எல்எக்ஸ் ரூ.68,599, விஎக்ஸ் ரூ.71,799 மற்றும் இசட் எக்ஸ் ரூ.76,699 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுகச்சலுகை விலை எனவும், விலை உயர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றிலும், மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் பிளஷர் பிளஸ்-ல் உள்ள 110.9 சிசி ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் இடம் பெற்றுள்ளது.

இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 8.1 எச்பி பவரையும், 5,750 ஆர்பிஎம்-ல் 8.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டாப் வேரியண்டான இசட்எக்சில், இந்த பிரிவிலேயே முதலாவதாக கார்னரிங் விளக்குகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, இடது புறம் திரும்பும்போது இடது புற விளக்குகளும், வலதுபுறம் திரும்பும்போது வலது புற விளக்குகளும் இடம் பெற்றுள்ளன. இசட்எக்ஸ் மாடலில் புளூடூத் இணைப்பு வசதி, நீல நிற டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வசதிகள் உள்ளன. விஎக்ஸ் மாடலில் ஆம்பர் எல்சிடி ஸ்பீடோமீட்டர் இடம்பெற்றிருக்கும். மாடலுக்கு ஏற்ப டயர் அளவுகளும் வேறுபடும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்